தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று (09.11.2022) முதல் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னையில் மாநகராட்சி கமிஷனரும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர். சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (09.11.2022) வெளியிடப்பட்டது. இதில் 2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பதை குறித்து சரிபார்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *