சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதால் அவர்களின் பாதுகாப்பு சிலசமயம் கேள்விக்குறி ஆகிவிடுகின்றது. எனவே ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கு என “ஹல்ல்ள்” என்ற ஆப்ஸ் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் ஒன்று இந்த ஆப்ஸ்ஸை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. நள்ளிரவில் வெளியே செல்லும் பெண் ஊழியர்கள் தங்களது செல்போனில் இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்துவிட்டால் ஆபத்து காலத்தில் இந்த ஆப்ஸ் 3 வகையான எச்சரிக்கை செய்திகளை அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி அலர்ட் செய்யும்.
இந்த ஆப்ஸில் “அலர்ட்’ என்ற பட்டனை பெண் ஊழியர்கள் ஆபத்து காலத்தில் அழுத்தியதும், சம்பந்தப்பட்ட பெண் ஊழியருக்கு நன்கு பரிட்சயமான 5 பேருக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ் செல்லும், அதுமட்டுமின்றி 5 பேரின் இ-மெயிலுக்கு உடனடியாக அவர்கள் ஆபத்தில் இருப்பதை சுட்டிக் காட்டும் இமெயில் ஒன்றும் செல்லும், மேலும் ஒரு தொலைபேசி எண்ணுக்கு அந்த பெண்ணின் செல்போனில் இருந்து அவசர அழைப்பும் உடனடியாக செல்லும் வகையில் இந்த ஆப்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்முனையில் இருக்கிறவர் அந்த அழைப்பை ஏற்று பேசும்போது ஏற்கனவே அந்த பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் கணினி குரல் சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் ஆபத்தில் இருப்பதை சுட்டிக் காட்டிவிட்டு இணைப்பைத் துண்டிக்கும். இதற்காக அந்த ஆப்ஸை டவுன்லோடு செய்யும்போதே, 5 செல்போன் எண்கள், 5 இமெயில் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் ஏற்கனவே பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும்.
English Summary: New Mobile App is introduced for Working Women’s Safety during their in Night Times.