தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்தை சென்னை மாநகராட்சியின் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தி வரும் நிலையில் தற்போது சென்னை மாநகராட்சியின் 20 பள்ளிகளுக்கு புரொஜக்டர் எனப்படும் திரைப்படம் காட்டும் கருவி மற்றும் ஒலிப்பெருக்கிகள் நேற்று வழங்கப்பட்டது.
இந்த 20 புரஜொக்டர்களின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் என்றும் இந்தக் கருவிகளை 20 பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் மேயர் சைதை சா.துரைசாமி திங்கள்கிழமை வழங்கினார். புரஜொக்டர்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தினால் காணொளி காட்சிகள் மாணவர்களின் மனதில் பதிந்து படிப்பின் தரம் உயரம் என்றும் தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற இந்த புரஜொக்டர்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலர் டி.ரஞ்சனி, உதவி கல்வி அலுவலர் டி.சுப்பிரமணியன், அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் மாநிலத் திட்ட மேலாளர் தீ.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பிலான 33 கணினிகள், தளவாடப் பொருள்கள் 11 மாநகராட்சி பள்ளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary: New Projectors were given by Chennai Mayor to Corporation Schools.