சென்னையில் ஆசிய, பசிபிக் நாடுகளின் மூட்டு இணைப்பு திசு மருத்துவ கூட்டமைப்பின் 3 நாள் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் அவர் இந்த பேசியதாவது: சுகாதாரத்துறையை மேம்படுத்த தமிழக அரசு முழு உடல் பரிசோதனை உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த துறைக்கு கடந்த ஆட்சி காலத்தில் ரூ.4,395 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இது 2015-16ஆம் ஆண்டில் இருந்து ரூ.8245 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் 1945ல் இருந்து 2655 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னை மருத்துவ கல்லூரியில்தான் மூட்டு, இணைப்பு திசு நோயியல் துறை தொடங்கப்பட்டது. இந்த துறையின் மேம் பாட்டுக்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இணைப்பு திசு நோய்க்கான புதிய ஆராய்ச்சிகள், அறுவை சிகிச்சைகள், குறைந்த விலையில் மருந்துகளை தயாரித்தல், நவீன மருத்துவ உபகரணங்கள் போன்றவை குறித்து அறிந்து கொள்ளவும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த மாநாடு பயன் உள்ளதாக இருக்கும். மேலும் சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் மூட்டு, இணைப்புத் திசு நோய்க்கான சிகிச்சை துறையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
English Summary : Joint connective tissue treatment is now available in Chennai Stanley hospital.