சென்னை மக்களின் குடிநீர்த்தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் சென்னை குடிநீர் வாரியம் பொதுமக்களுக்கு பல வழிகளில் தண்ணிரை சப்ளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தொலைபேசி மூலம் பொதுமக்கள் தண்ணீர் கேட்டால் சப்ளை செய்யும் புதிய ஏற்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
பருவமழை பொய்த்ததன் காரணமாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, லாரிகளின் எண்ணிக்கை 530 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீர்நிரப்பும் நிலையத்தின் வேலை நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 25 புதிய நீர் நிரப்பும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
புதிதாக 15 தொலைபேசி இணைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. முதலில் பதிவோருக்கு லாரிகள் மூலம் முதலில் குடிநீர் அனுப்பி வைக்கப்படும். நீர் நிரப்பும் நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரம் வரை 9 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.600 மற்றும் 6 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.400 கட்டணமாகும். நீர் நிரப்பும் நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்துக்கு மேல் உள்ள இடங்களுக்கு 9 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.810 மற்றும் 6 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.610 கட்டணமாகும்.
திருவொற்றியூர் பகுதிக்கு 76959 68201, மணலிக்கு 76959 68202, மாதவரம் பகுதிக்கு 76959 68203, தண்டையார்பேட்டை பகுதிக்கு 76959 68204, ராயபுரத்துக்கு 76959 68205, திரு.வி.க.நகருக்கு 76959 68206, அம்பத்தூர் பகுதிக்கு 76959 68207, அண்ணாநகர் பகுதிக்கு 76959 68208, தேனாம்பேட்டைக்கு 76959 68209, கோடம்பாக்கம் பகுதிக்கு 76959 68210, வளசரவாக்கம் பகுதிக்கு 76959 68211, ஆலந்தூர் பகுதிக்கு 76959 68212, அடையாறுக்கு 76959 68213, பெருங்குடி பகுதிக்கு 76959 68214, சோழிங்கநல்லூர் பகுதிக்கு 76959 68215 ஆகிய எண்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. லாரி மூலம் தண்ணீர் வேண்டுவோர் இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary : Chennai water board has arranged drinking water in One call.