பத்து வருடங்கள் கழித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்களில் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர், தங்கள் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பிசியாக உள்ளனர். மேலும் தேர்தல் பிரச்சாரம் செய்வதிலும் இரு அணிகளில் உள்ள உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வரும் அக்டோபர் 8ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையர் ஈ.பத்மநாபன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இதுவரை வெளியூரில் உள்ள உறுப்பினர்களுக்கு தபால் ஓட்டு அளிக்கும் வசதி இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் சென்னை நகர எல்லைக்கு அப்பால் வசிக்கும் வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் வெளியூர் உறுப்பினர்களின் முகவரிக்கு அக்டோபர் 9-ம் தேதி தபாலில் வாக்குச்சீட்டு அனுப்பப்படும் என்றும் என தேர்தல் ஆணையர் பத்மனாபன் அறிவித்துள்ளார்
தேர்தல் ஆணையத்தின் மூலம் தபாலில் அனுப்பப்படும் வாக்குச் சீட்டுகளை வரும் அக்டோபர் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து சேரும் வகையில் உறுப்பினர்கள் அனுப்பி வைக்க வேண்டும். சென்னைக்கு அப்பால் வசிக்கும் உறுப்பினர்கள் நேரில் வந்து வாக்களிக்க விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அனுமதி கொடுக்கப்பட்டவர்கள் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டையை தவறாமல் கையுடன் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நடிகர் சங்க உறுப்பினர்கள் தங்களுடைய முகவரி மாற்றம் பற்றிய தகவல்களை தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary:out side city members could vote in Actors Association Election.