கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. கிரீஸ் நாட்டின் பொருளாதார தேக்க நிலை மற்றும் பல நாடுகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த தங்கத்தை விற்க முன்வந்தது, அமெரிக்க டாலர் மதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவைகளே தங்கத்தின் விலை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 2005ஆம் ஆண்டில் இருந்து 2013ஆம் ஆண்டு வரை வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை பல மடங்குகளாக உயர்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.
2014ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் சுமார் மூவாயிரம் ரூபாய் என்ற நிலையை எட்டிய தங்கம் தற்போது ரூ.2352 ஆக குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டின் விற்பனை விலையை விட கிராம் ஒன்றுக்கு சுமார் 700 ரூபாய் அதாவது பவுன் ஒன்றுக்கு சுமார் 5.000 ரூபாய் குறைந்துள்ளது.
ஜூலை 15ஆம் தேதி ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 664 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து 21ஆம் தேதி பவுன் ரூ.19 ஆயிரத்து 80 ஆக விற்றது. 22-ம் தேதி அதிரடியாக பவுனுக்கு ரூ.216 குறைந்து ரூ.18 ஆயிரத்து 864 ஆனது. அதாவது பவுன் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. 23ஆம் தேதி பவுனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.19 ஆயிரத்து 40 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.224 குறைந்தது. ஒரு பவுன் ரூ.18 ஆயிரத்து 816 ஆக உள்ளது.
இதன் மூலம் இன்று மீண்டும் தங்கம் விலை பவுன் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது. தங்கம் விலை குறைந்து வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் திருமண காலம் வர இருப்பதாலும், சர்வதேச விலை நிலவரத்தை பொறுத்தும் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் மொத்த பணத்தையும் தங்கத்தில் முதலீடு செய்யாமல், ஒரு பகுதியை மட்டும் முதலீடு செய்வது நன்மை பயக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஒரு சரவன் 22 கேரட் தங்கத்தின் விலை 1930-ம் ஆண்டு முதல் எப்படி இருந்தது என்பதை தற்போது பார்ப்போம்.
1930 – ரூ.14, 1935 – ரூ.24
1940 – ரூ.28, 1945 – ரூ.49
1950 – ரூ.79, 1955 – ரூ.63
1960 – ரூ.88, 1965 – ரூ.56
1970 – ரூ.147, 1975 – ரூ.432
1980 – ரூ.1064, 1985 – ரூ.1544
1990 – ரூ.2520, 1995 – ரூ.3600
2000 – ரூ.3480, 2005 – ரூ.4640
2006 – ரூ.7680, 2007 – ரூ.7600
2008 – ரூ.9200, 2009 – ரூ.10944
2010 – ரூ.12500, 2011 – ரூ.21120
2012 – ரூ.22896, 2013 – ரூ. 23568
English Summary : People are happy because for the past few weeks the price of gold has reached an unprecedented decline.