எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த 15 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.04ம், டீசல் ரூ.7.58ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றும் விலை உயர்த்தப்பட்டு பெட்ரோல் ரூ.82.58க்கும், டீசல் ரூ.75.80 க்கும் விற்கப்படுகிறது.
தொடர்ந்து அதிகரிக்கும் விலையேற்றத்தால், லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.