உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை என்ற பெருமையை பெற்ற சென்னை மெரீனா கடற்கரையை நேற்று தனியார் நிறுவன ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மெரினா தற்போது தூய்மையாக காணப்படுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து இந்த சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் 8 மணி வரை மெரினாவை சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இது குறித்து அந்த அமைப்பினர் கூறியாதவது: பாரத பிரதமர் நரேந்திர மோடியின் “தூய்மை இந்தியா’ திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் மெரீனா கடற்கரையில் இருந்த குப்பைகளை அகற்ற முடிவு செய்தோம். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குப்பையை அகற்றி வரும் நாங்கள் கடந்த இரண்டே நாள்களில் சுமார் 60 டன் அளவிலான குப்பைகளை அகற்றியுள்ளோம்.
இதேபோன்று பிற நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் பொது இடங்களை தூய்மைப்படுத்த முன்வந்தால், மெரினா மட்டுமின்றி சென்னை முழுவதும் சுத்தமான நகரமாக மாறிவிடும்
இவ்வாறு அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
English Summary: Private Associations comes to clean Chennai Marina Beach, according to Scheme “Clean India”.