சமீபத்தில் தனது உதவியாளர் இயக்கிய ‘கள்ளப்படம்’ படத்தை தனது சொந்த பேனரில் ரிலீஸ் செய்த பிசாசு’ இயக்குனர் மிஷ்கின், மீண்டும் தனது நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க மற்றொரு உதவியாளருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராம் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் வில்லன் வேடத்தை ஏற்கும் மிஷ்கின், தனது உதவியாளர் ஜி.ஆர்.ஆதித்யா என்பவரை இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆக்கியுள்ளார்.
ஆக்ஷன் மற்றும் திகில் திரைக்கதையை கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும், இவ்வருட இறுதியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
English Summary: Priyamani is going to act in Miskin’s Production starring with Director Ram.