2022ஆம் ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும் என்று தமிழக தலைமைச் செயலாளர் திரு வெ.இறையன்பு அவர்கள் தெரிவித்துள்ளார்.
வ.எண் | பொது விடுமுறை நாட்கள் 2023 | தேதி | நாள் |
1 | ஆங்கில புத்தாண்டு | 01.01.2023 | ஞாயிறு |
2 | பொங்கல் | 15.01.2023 | ஞாயிறு |
3 | திருவள்ளுவர் தினம் | 16.01.2023 | திங்கள் |
4 | உழவர் தினம் | 17.01.2023 | செவ்வாய் |
5 | குடியரசு தினம் | 26.01.2023 | வியாழன் |
6 | தைப் பூசம் | 05.02.2023 | ஞாயிறு |
7 | தெலுங்கு வருடப் பிறப்பு | 22.03.2023 | புதன் |
8 | வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு | 01.04.2023 | சனி |
9 | மகாவீர் ஜெயந்தி | 04.04.2023 | செவ்வாய் |
10 | புனித வெள்ளி | 07.04.2023 | வெள்ளி |
11 | தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தினம் | 14.04.2023 | வெள்ளி |
12 | ரம்ஜான் | 22.04.2023 | சனி |
13 | மே தினம் | 01.05.2023 | திங்கள் |
14 | பக்ரீத் | 29.06.2023 | வியாழன் |
15 | முகரம் | 29.07.2023 | சனி |
16 | சுதந்தர தினம் | 15.08.2023 | செவ்வாய் |
17 | கிருஷ்ண ஜெயந்தி | 06.09.2023 | புதன் |
18 | விநாயகர் சதுர்த்தி | 17.09.2023 | ஞாயிறு |
19 | மிலாது நபி | 28.09.2023 | வியாழன் |
20 | காந்தி ஜெயந்தி | 02.10.2023 | திங்கள் |
21 | ஆயுத பூஜை | 23.10.2023 | திங்கள் |
22 | விஜயதசமி | 24.10.2023 | செவ்வாய் |
23 | தீபாவளி | 12.11.2023 | ஞாயிறு |
24 | ஞாயிறு | 25.12.2023 | திங்கள் |