2022ஆம் ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும் என்று தமிழக தலைமைச் செயலாளர் திரு வெ.இறையன்பு அவர்கள் தெரிவித்துள்ளார்.

வ.எண் பொது விடுமுறை நாட்கள் 2023 தேதி நாள்
1 ஆங்கில புத்தாண்டு 01.01.2023 ஞாயிறு
2 பொங்கல் 15.01.2023 ஞாயிறு
3 திருவள்ளுவர் தினம் 16.01.2023 திங்கள்
4 உழவர் தினம் 17.01.2023 செவ்வாய்
5 குடியரசு தினம் 26.01.2023 வியாழன்
6 தைப் பூசம் 05.02.2023 ஞாயிறு
7 தெலுங்கு வருடப் பிறப்பு 22.03.2023 புதன்
8 வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு 01.04.2023 சனி
9 மகாவீர் ஜெயந்தி 04.04.2023 செவ்வாய்
10 புனித வெள்ளி 07.04.2023 வெள்ளி
11 தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தினம் 14.04.2023 வெள்ளி
12 ரம்ஜான் 22.04.2023 சனி
13 மே தினம் 01.05.2023 திங்கள்
14 பக்ரீத் 29.06.2023 வியாழன்
15 முகரம் 29.07.2023 சனி
16 சுதந்தர தினம் 15.08.2023 செவ்வாய்
17 கிருஷ்ண ஜெயந்தி 06.09.2023 புதன்
18 விநாயகர் சதுர்த்தி 17.09.2023 ஞாயிறு
19 மிலாது நபி 28.09.2023 வியாழன்
20 காந்தி ஜெயந்தி 02.10.2023 திங்கள்
21 ஆயுத பூஜை 23.10.2023 திங்கள்
22 விஜயதசமி 24.10.2023 செவ்வாய்
23 தீபாவளி 12.11.2023 ஞாயிறு
24 ஞாயிறு 25.12.2023 திங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *