புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 மணிக்கு புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மக்களின் அபிமானம் பெற்ற இந்த நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் இப்போது மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் 3 பகுதிகள் உள்ளன. முதலில் செய்திக்கு அப்பால் பகுதி. இந்த பகுதியில் அன்றாட பத்திரிகைகளில் வெளியாகும் முக்கியமான தலையங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் மையக்கருத்து தொகுப்பாளரால் விளக்கப்படுகிறது. மக்களிடையே டிஜிட்டல் மோகம் வளர்ந்துவிட்ட காலத்தில் தலையங்கம் படிப்பது என்பது பெரிய அளவில் குறைந்து விட்டது. இப்பகுதியின் மூலம் முக்கிய தலையங்கங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
அடுத்து வலையோரம். இணையமே உலகம் என மாறிவிட்ட இந்த காலகட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்படி பதிவு செய்யப்படும் முக்கிய பதிவுகளும் அதற்கு மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் இந்த பகுதியின் மூலம் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. எந்த ஒரு கருத்துக்கும் ஆதரவு எதிர்ப்பு என இருதரப்பு இருப்பதை உணர்ந்து அனைத்து தரப்பின் கருத்துக்களுக்கும் இடமளிப்பது இதன் தனிச்சிறப்பு!
மூன்றாவது பகுதி புதிய கோணம். இந்த பகுதியில் தினசரி நாளிதழ்களில் வரும் நடுப்பக்க கட்டுரைகள் எடுக்கப்பட்டு விருந்தினர் ஒருவருடன் விவாதிக்கப்படும். அந்த கட்டுரைகள் பேசும் உட்கருத்தின் பல்வேறு கோணங்கள் குறித்து அரசியல் விமர்சகர்கள், துறை சார் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள். பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் ஆலோசிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியை புதிய தலைமுறையின் பிரதான நெறியாளர்கள் கார்த்திகேயன், விஜயன், தமிழினியன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.