கடந்த வருடம் தீபாவளி தினத்தில் விஜய் நடித்த கத்தியும், விஷால் நடித்த பூஜை திரைப்படமும் நேருக்கு நேர் மோதியது. இதையடுத்து மீண்டும் விஜய், விஷால் படங்கள் மோதவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பாயும் புலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜய்யின் ‘புலி’ திரைப்படம் முதலில் விஜய் பிறந்த நாளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் பின்னர் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் தற்போது செப்டம்பர் 17ஆம் தேதியில் வெளியிட உள்ளதாகவும், அதற்குள் ‘புலி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சிம்புதேவன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்த புதிய விதிகளின்படி ரூ.15கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் முக்கிய தினங்களில் மட்டுமே ரிலீஸாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு அடுத்த முக்கிய தினம் செப்டம்பர் 17ஆம் தேதி மட்டுமே இருப்பதால் அந்த தேதியை புலி படக்குழுவினர் தேர்வு செய்ததாகவும், இதன் காரணமாக புலியும், பாயும் புலியும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.

English Summary: Puli and Payum Puli are going to clash on Sep.17 same day.