Rajini-326x235சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் மலேசியாவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக படத்தின் இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தே, மகளாக தன்ஷிகா மற்றும் கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்கும் தன்ஷிகாவின் கேரக்டர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. தன்ஷிகா இந்த படத்தில் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணாக நடிக்கின்றார். லோக்கல் டான் கேரக்டரில் நடிக்கும் ரஜினி, தன்னுடைய மகளை போதைக்கு அடிமையாக்கியவர்களை கண்டுபிடித்து பழிவாங்குவது இந்த படத்தில் இடம்பெறும் காட்சிகளில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. முதலில் இந்த படத்திற்கு ‘காளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்த நிலையில் அதன் பின்னர் கண்ணபிரான்’ என்ற டைட்டிலும் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்த செய்திகளின்படி ‘இந்த படத்திற்கு ‘கபாலி’ என்ற டைட்டிலை இயக்குனர் ரஞ்சித் தேர்வு செய்துள்ளதாகவும், இந்த டைட்டிலுக்கு ரஜினிகாந்த் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை சென்னையில் தாதாவாக வாழந்த ஒருவருடைய உண்மைக்கதையின் அடிப்படையில் அமைக்கபப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மலேசியாவுக்கு படப்பிடிப்பிர்கு செல்லும் முன் மைலாப்பூரில் அமைக்கப்பட்டுள்ள செட் ஒன்றில் இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் ‘கபாலீஸ்வரன் என்றும் அதனால் இந்த செண்டிமெண்டாக கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ள  மைலாப்பூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

English Summary: Rajni-Ranjit Movie title Kabali.