புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் மழை ஓய்ந்து தேங்கியிருந்த வெள்ளம் வடிந்த பின், மீண்டும் டிசம்பர் 13 முதல் தொடங்கி டிசம்பர் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால் முன்பே அறிவித்திருந்த அரையாண்டு விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *