தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தனது குரலால் வசீகரித்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாடகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதரும் கூட. யாரையும் எடுத்தெறிந்து பேசாதவர், அடுத்தவர்களையும் மதிக்கும் பண்பு உடையவர். இந்த கொரோனா காலத்தில் கூட வீட்டில் இருந்த ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்களை பாடி அதன் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை, வாழ்வாதாரத்தை இழந்த பலருக்கு கொடுத்து உதவினார்.

தற்போது  கொரோனா நோய் பாதிக்கப்பட்டு நன்கு குணமாகி வந்த நிலையில் நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக உள்ளார். அவரை நல்லபடியாக குணமாக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் பின்னணிப் பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் விரைவில் குணமைடைய வேண்டி  லைவ் சென்னை மற்றும் அதன் வாசகர்கள் சார்பாக சார்பாக இறைவனிடம் வேண்டுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *