பிரபு மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘சிறைச்சாலை’ என்ற திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. அதன்பின்னர் சுமார் 20 வருடங்கள் கழித்து மீண்டும் அதே இருவர் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ், மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்திற்கு ‘புலி முருகன்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஷாக் இயக்கவிருக்கும் இந்த படத்தில் மோகன்லால் ஹீரோவாகவும், பிரபு படம் முழுவதும் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார்.
மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றது.
English Summary : After 20 years Prabhu and Mohan lal joins in the film “Puli Murugan” directed by Vishak.