ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சோனாக்ஷி சின்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘அகிரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க நடிகை லட்சுமிராய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து லட்சுமி ராய் தனது டுவிட்டரில் கூறும்போது, ‘பாலிவுட்டின் முதல் படமே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்றும், தனக்கு இந்த வாய்ப்பை அளித்த அவருக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் பதிவு செய்துள்ளார்.

‘மெளன குரு’ படத்தில் அருள்நிதி நடித்த கேரக்டரில் சில மாற்றங்கள் செய்து சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக கூறப்படும் நிலையில் அதே படத்தில் உமா ரியாஸ் நடித்த கேரக்டரில் லட்சுமிராய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

English Summary : Lakshmi Rai signed for an Important role in AR Murugadas upcoming film ” Agira “.