பெட்ரோல் மற்றும் டிசல் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்படஉள்ளது.அதன்படி பெட்ரோல் விலை 49 பைசாவும், டிசல் விலை 1.21 ரூபாயும் குறைக்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை சரிந்ததும், அமெரிக்க டாலர்க்கு இணையான இந்திய ருபாய் மதிப்பின் உயர்வும், இந்த விலை குறைப்புக்கு காரணமாக உள்ளது.
மேலும் ஒவ்வொரு மாநில அரசின் வரிகளைப் பொறுத்து பெட்ரோல் மற்றும் டிசல் விலையில் சிறிய அளவில் மாறுதல்கள் இருக்கும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னையில் தற்போது 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.63.26 ஆக உள்ளது. அது ரூ.62.75 ஆக குறையும்.
டீசல் விலை தற்போது 1 லிட்டர் ரூ.52.92 ஆக உள்ளது. அது ரூ.1.31 குறைகிறது. இதனால் சென்னையில் டீசல் விலை இன்று இரவு முதல் லிட்டருக்கு ரூ.51.61 ஆக விற்பனையாகும்.

English Summary : Petrol price reduce to 49 paise and Diesel price reduce to 1.21 rupee.