பாரத பிரதமரின் கனவுத்திட்டங்களில் ஒன்றாகிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி 20 நகரங்கள் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டது. அதில் ஒன்று சென்னை என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டியாக மாறவிருக்கும் சென்னையில் முதல்கட்டமாக தி.நகரை புதுப்பொலிவுடன் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டியால் தி.நகருக்கு என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை தற்போது பார்ப்போம்.
1. ‘வைபை’ வசதியுடன் கூடிய தரமான தொலைத்தொடர்பு
2. குழாய் மூலம் சுத்தமான குடிநீர் விநியோகம்
3. தானியங்கி கழிவு சேகரிப்பு
4. தடையில்லா மின்சாரம்5. சுகாதாரம்
5. திடக்கழிவு மேலாண்மை
6. போக்குவரத்து மின் ஆளுமை
7. பொது மக்கள் பங்களிப்பு
போன்ற கட்டமைப்புகள் தி.நகரில் உருவாக்கப்படவுள்ளது.
மேலும் எல்.இ.டி. தெரு விளக்குகள், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க பாதசாரிகள் நடந்து செல்ல, சைக்கிளில் செல்ல என சாலைகளில் தனித்தனி பிரிவுகள், வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நவீன டெக்னாலஜி கையாளப்படும் முறைகளும் பின்பற்றப்படவுள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்களை மேலும் பசுமையாக மாற்றப்படும்
தி.நகரில் மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற 7 சதுர கி.மீ. சுற்றளவு கொண்ட 1,717 ஏக்கர் பரப்பளவு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகள், சில்லரை வணிக பகுதிகள், கல்வி மற்றும் பொழுது போக்கு மையங்கள் சீராக மேம்படுத்தப்பட்டு பசுமை புல்வெளிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைபை வசதியுடன் கூடிய தகவல் தொடர்பு வசதிக்கு ரூ.50.69 கோடியும், பாதசாரிகள் நடந்து செல்லும் பாதைகள், சைக்கிள்கள் மற்றும் மோட்டார் அல்லாத வாகனங்கள் செல்லும் பாதைகள் அமைக்க 175.66 கோடியும், சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராவுடன் நவீன போக்குவரத்து நிர்வாக திட்டத்துக்கு ரூ.8.12 கோடியும், பூங்காக்களில் பசுமை வெளிகளுடன் மேம்படுத்த ரூ.4.95 கோடியும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ளது. இதன் மூலம் தியாகராய நகர் பகுதி சர்வதேச நகரங்களுக்கு இணையாக விரைவில் புதுப்பொலிவு பெறும் என்பது உறுதி.
இந்த திட்டத்தை செயல்படுத்த ஜே.எல்.எல். ப்ராபர்ட்டி கன்சல்டன்ட்ஸ் மற்றும் டவுன்லேண்ட் கன்சல்டன்ட்ஸ் டாடா கன்சல்டிங் என்ஜினீயரிங் ஆகிய இந்திய நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
English Summary: Smart City project:New Brightness of T Nagar Chennai.