டிவிலியர்ஸ், ஆம்லா, ரோசவ் ஆகியோர் மேற்குஇந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். டிவிலியர்ஸ் 44 பந்துகளில் 16 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகள் அடித்து 149 ரன்களை குவித்து சாதனைபடைத்தார். ரோசவ் 128 ரன்னில் ஆட்டமிழந்தார். மேலும் தொடக்க ஆட்டகார வீரர் ஆம்லா 153 ரன்களை குவித்து ஆட்டமிழாக்காமல் களத்தில் இருந்தார்.
தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் அதிவேக அரைசதம், அதிவேக சதம் கடந்து உலக சாதனை படைத்தார். மேலும் , அதிக சிக்சர் அடித்த இந்தியாவின் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்தார் மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டில் பாகிஸ்தான் வீரர் அஃப்ரீதியின் சாதனையை முறியடித்தார்.
தென் ஆப்ரிக்க அணி 50ஓவர் முடிவில் 439 ரன்கள் குவித்தது. மேற்குஇந்திய தீவுகள் அணி 291 ரன்கள் மட்டுமே குவித்தது.