தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று (28.11.2022) முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை நாட்களை தவிர்த்து, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *