தமிழகம் முழுவதும் நாளை (21.09.2022) 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போதுவரை 1,166 பேர் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் மருத்துவமனைகள் என மொத்தம் உள்ள 11,333 மருத்துவமனைகளில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூடுதலாக நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 100 முகாம் நடைபெறும்.
இந்த முகாம்களில் சளி, இருமல், காய்ச்சல் ஏதேனும் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்தக் காய்ச்சல் முகாம்களில் 476 நடமாடும் மருத்துவக் குழுவினர் ஈடுபடுவார்கள். 3 நபர்களுக்கு மேற்பட்ட நபர்கள் காய்ச்சல் இருக்கும் பகுதியில் இந்த முகாம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அமைச்சர் கூறினார்.