தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளரும், இளம் தலைமுறையினரின் மனம் கவர்ந்த இசை இளவரசருமான யுவன் ஷங்கர் ராஜாவின் 25 – வது வருட கொண்டாட்டம் பிரமாண்டமாக நடந்தது.

பிளாக்‌ஷீப்பின் “யுவன் 25” என்கிற அனல் பறக்கும் இந்த இசை நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2-ந் தேதி ஞாயிறு காலை 10 :00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், இசைஞானி இளையராஜா மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் கார்த்தி, ஜி.வி.பிரகாஷ், அமீர், செல்வராகவன், லிங்குசாமி, வசந்த், விஜய், பா.இரஞ்சித், பிரபு சாலமன், தியாகராஜன் குமாரராஜா, ஹரிஷ் கல்யாண், டி.இமான், சந்தோஷ் நாராயணன், தேவி ஸ்ரீ பிரசாத், ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆண்ட்ரியா, ஃதீ, அதிதி ஷங்கர், எஸ்.பி.பி,சரண், ஏ.ஆர்.அமீன், சினேகன், கிருஷ்ணா, இளன், நா.முத்துக்குமார் குடும்பம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பிரபலங்கள் பலரும், யுவனின் சூப்பர் ஹிட் பாடல்களை மேடையில் பாடி அசத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *