ரெயில் பயணிகளின் வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அவ்வப்போது தெற்கு ரெயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கி வருகிறது. இதனால் பயணிகள் நெரிசல் இன்றி பயணம் செய்ய பேருதவியாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து நெல்லை மற்றும் எர்ணாகுளம் ஆகிய இரு நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நேற்று அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28ம் தேதி இரவு 9.05 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06063) புறப்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு நெல்லை சென்று அடையும்.
இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து 28ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06065), அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திரிச்சூர் வழியாக மறுநாள் காலை 10.50 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
மேலும் செயல்பாட்டு காரணங்களுக்காக ஹஸ்ரத் நிஜாமுதீன்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12618) நாளை அதாவது 13-8-2015 அன்று ரத்து செய்யப்படுவகிறது. இவ்வாறு தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு ஒன்றில் அறிவித்துள்ளது.
English Summary : Southern railway has announced special train between Nellai – Ernakulam.