ரயில் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை-தூத்துக்குடி: சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 6.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06053) புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறு மார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் மாலை 5.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06054) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை-திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மாலை 6.50 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06003) புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். மறு மார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து ஜூன் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06004) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இதுபோல, சென்னை சென்ட்ரல்-கோவை, தாம்பரம்-நாகர்கோவிலுக்கு சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (மார்ச் 21) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *