ரெயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தென்னக ரெயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கி வருகிறது. அந்த வரிசையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கும், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரவு 9.05 மணிக்கு புறப்படும் வண்டி எண். 06063 என்ற சிறப்பு ரெயில் மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 6 மற்றும் 13 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து பகல் 2.45 மணிக்குப் புறப்படும் வண்டி எண். 06064 என்ற சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

அதேபோல், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து செப்டம்பர் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் வண்டி எண். 06065 என்ற சூப்பர்பாஸ்ட் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலை 10.50 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும். மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து 13ம் தேதி மாலை 7 மணிக்குப் புறப்படும் வண்டி எண்.06066 என்ற சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில்களை ரெயில் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

English Summary : Special train is announced by Southern Railway to Tirunelveli and Ernakulam from Chennai.