இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 17ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாறியதால் விஜய் விட்ட இடத்தை ஜி.வி.பிரகாஷ் பிடித்தார் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இன்னுமொரு முக்கிய நடிகரும் இந்த தேதியை பகிர்ந்து கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’ திரைப்படமும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி தயாரித்துள்ள திரைப்படம் ‘ரஜினிமுருகன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி, பேராசிரியர் ஞானசம்பந்தம், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் வேந்தர் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. மான்கராத்தே, காக்கி சட்டை படங்களை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘ரஜினிமுருகன்’ படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த டிரைலர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Sivakarthikeyan’s Rajini murugan to release on September 17th.