‘லேசா லேசா’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை த்ரிஷா கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்து வருகிறார். முப்பது வயதில் பல நடிகைகள் அம்மா, அண்ணி, அக்கா வேடங்களில் நடித்து வரும் நிலையில் 32 வயதாகியும் இன்னும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக களத்தில் இருக்கும் ஒரே நடிகை த்ரிஷாதான். இந்நிலையில் த்ரிஷா தனது அடுத்த படத்தில் 20 வயது இளம்பெண்ணாக நடிக்கவுள்ளார்

தமிழ் தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ‘நாயகி’. இந்த படத்தில், த்ரிஷா 20 வயது பெண்ணாக நடிக்க உள்ளதால இந்த படத்தின் இயக்குநர் கோவி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கதாபாத்திரத்துக்காக த்ரிஷா கடந்த சில மாதங்களாகவே தனது உடல் எடையை குறைத்து, தன்னை தயார்படுத்தி உள்ளதாகவும் இயக்குனர் கூறினார். இந்த படம் குறித்து அவர் மேலும் கூறியதாவது: “இந்த கதாபாத்திரம் பார்க்க எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் அவரிடம் கூறவில்லை. கதையை கேட்ட பிறகு அவரே என்ன தேவை என்பதை புரிந்து கொண்டார். படத்தில் நாயகன் இருந்தாலும் த்ரிஷா தான் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

நான் அவரது மிகப்பெரிய விசிறி. அவரை வைத்தே படம் இயக்க வேண்டும் என்பது என் கனவு. கதை கேட்ட 10 நிமிடத்தில் அவர் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி. 1980-களில் இருந்த பாணியில் த்ரிஷாவின் தோற்றம் இருக்கும். கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் நடப்பது போல கதையமைத்துள்ளேன். 98 சதவீதம் காமெடியும், 2 சதவீதம் ஹாரர் படமாகவும் இது இருக்கும்.

ராஜேஷ் என்ற தெலுங்கு நடிகரை தமிழில் அறிமுகப்படுத்துகிறேன். அதே போல சென்றாயனை தெலுங்கில் அறிமுகப்படுத்துகிறேன்.

படத்தில் இரண்டாவது நாயகிக்கான தேடல் நடந்து வருகிறது. அதுவும் முக்கியப் பாத்திரமாக இருக்கும். மேலும் இந்தப் படத்துக்காக நாயகி த்ரிஷா 3 நிமிடப் பாடல் ஒன்றை பாடவுள்ளார். அந்தப் பாடல் டைட்டிலுக்காகவும், படத்திலும் பயன்படுத்தப்படும். 60 சதவீத படப்பிடிப்பு சென்னையிலும், மீதம் ஹைதராபாதிலும் நடைபெறும்”.

இவ்வாறு இயக்குநர் கோவி தெரிவித்துள்ளார்.

English Summary : Trisha to play 20 year old girl role in “Nayaki” movie .