சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன பிணவறை மற்றும் பிரேத பரிசோதனை மையம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 20 பிணங்களை மட்டுமே சேமித்து வைக்கும் வசதி இருந்தது. இதனால் ரூ.2 கோடி செலவில் நவீன பிணவறையும் பிரேத பரிசோதனை மையமும் கட்டப்பட்டு வந்தது. தற்போது இந்த பணி முழுவதும் முடிவடைந்ததை அடுத்து நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
புதியதாக கட்டப்பட்டுள்ள இந்த நவீன பிணவறையில் சுமார் 60 சடலங்கள் வரை பாதுகாக்க முடியும் என்றும், இந்த புதிய பிணவறையில் மைனஸ் 8 டிகிரி வரை குளிர் நிலை பராமரிக்கப்படுவதால் இதில் நீண்ட நாட்களுக்கு பிணங்களை பாதுகாப்பாக வைக்கலாம் என்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கார்குழலி கூறியுள்ளார்.
English Summary : Stanley Hospital spends Rs. 2 Crores for mortuary and Autopsy center. It can now store upto 60 bodies.