2003 இல் அறிமுகப்படுத்தப்பட்ட “உலகின் மிக பிரபலமான போன்” என்ற அங்கீகாரத்தையும், உலகமெங்கும் 250 மில்லியன் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்ட நோக்கியா 1100 மீண்டும் ஆண்ட்ராய்டு வசதியுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இப்போது ஆண்ட்ராய்ட் 5.0 லில்லி பாப் மென்பொருளுடன் கூடுதல் வசதியாக குவாட்-கோர் மீடியா டெக் (MT-6852) ப்ராஸசர், 512 எம்பி நினைவுத்திறன் கொண்ட ராம் என்று ஏகப்பட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்க பட்டுள்ளது .

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான மென்பொருள் ஒப்பந்தத்தின் காரணமாக இதுவரை ஸ்மார்ட் போன் தயாரிக்காமல் இருந்த நோக்கியா நிறுவனம், உலக அளவில் தன் நிறுவனத்தை அழியாப் புகழைப் பெற்றுத்தந்த 1100 என்ற பெயரிலேயே தனது முதல் ஆண்ட்ராய்டு போனைக் கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.