தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் டுவிட்டரை கலக்கி வரும் நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் இந்த டுவிட்டரில் இணைந்துள்ளார். https://twitter.com/Suriya_offl என்ற பெயரில் அந்த டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த டுவிட்டர் பக்கத்தில் சூர்யா பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். ரொம்ப நாளாக டுவிட்டருக்கு வரவேண்டும் என எண்ணி இருந்தேன். இன்று வந்தாச்சு. ஏன்? எதுக்குன்னு, கேள்வியெல்லாம் கேட்டீங்கன்னா, என்னால நினைக்க முடிந்ததைவிட அதிகமாக அன்பு காட்டுகிறீர்கள். அதுக்காகத்தான். உங்களுடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்று பேசியுள்ளார்.

இந்த டுவிட்டர் கணக்கை சூர்யா தொடங்கி சில நிமிடங்களிலேயே 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவரது டுவிட்டரை தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.