சென்னை போன்ற பெருநகரங்களில் வீடுகளில் தோட்டம் அமைக்கும் அளவுக்கு இடவசதி இல்லாத நிலை உள்ளது. எனவே வீடுகளின் மொட்டை மாடிகளில் மற்றும் அடுக்குமாடி வீடுகளில் தோட்டம் அமைக்கும் பயிற்சியை சென்னை வேளாண் பல்கலைக்கழகம் அளிக்க இருக்கின்றது.

இந்த ஒருநாள் பயிற்சி, வரும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் வீட்டில் இருக்கும் பெண்கள், மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்பட யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.