பள்ளிகளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள், செல்போன் போன்றவற்றை கொண்டு செல்ல மாணவர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிவுள்ளார்.

பள்ளிகளில் காலையில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கிழ்கண்ட அறிவுரையை வழங்குமாறும் இக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில்,

  • பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் விலை உயர்ந்த ஆபரணம் அணிந்து வருவது, செல்போன் கொண்டு வருவது போன்றவைகளை எடுத்து வரக்கூடாது.
  • மாணவ-மாணவிகள் தனியாக வீட்டிலிருந்து வருவதை தவிர்க்கவும்.
  • வரும் வழியில் இருக்கும் நீர் நிலைகளின் அருகில் செல்ல வேண்டாம்.
  • ரயில்வே தண்டவாளங்கள், நெடுஞ்சாலைகள் இருப்பின் கவனமாக அதை கடக்க வேண்டும்.
  • ரயில் மற்றும் பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசவோ, அவர்கள் தரும் உணவுகளை உண்ணவோ கூடாது.
  • சக மாணவ-மாணவியரிடமோ, வேறு பள்ளி மாணவ-மாணவியரிடமோ சண்டை, வாக்குவாதம், கேலி கிண்டல்கள் போன்றவற்றை தவிர்க்கவும்.
  • பள்ளி நேரம் முடிந்த பிறகு பெற்றோரிடம் தெரிவிக்காமல் வெளியிலோ, நண்பர்கள் வீட்டிற்கோ செல்லவேண்டாம்.

English Summary: Students are banned to put valuable ornaments in school campus.