சென்னை: அரபிக் கடலில் இருந்து கிழக்கு நோக்கி, தமிழகம் வழியே நகரும் மேக கூட்டங்களால், அடுத்த சில நாட்களுக்கு, அவ்வப்போது திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது.

நேற்று முன்தினம், சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மேலடுக்கு சுழற்சியால், ஆங்காங்கே மிதமான மழை பெய்தது.

நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, சோழிங்கநல்லுாரில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், கே.வி.கே.குப்பம், மன்னார்குடி, நீடாமங்கலம், 5; தாம்பரம், 4; சோழவரம், மேட்டுப்பட்டி, இளையான்குடி, மயிலாடுதுறை, வேதாரண்யம், மாமல்லபுரம், பரமக்குடி, ஏற்காடு மற்றும் மதுரை சிட்டாம்பட்டியில், 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *