Rajini-326x235சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ‘அட்டக்கத்தி’ தினேஷ், ‘மெட்ராஸ் கலையரசன், உள்பட பலர் நடித்து வந்த ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், கபாலி படத்தில் நடித்துள்ள கேரக்டர்கள் குறித்த தகவல்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் வயதான டான் வேடம் ஏற்று நடித்துள்ளார் என்றும், அவருடைய ஜோடியாக நடித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே குமுதவள்ளி என்ற கேரக்டரில் எஸ்டேட்டில் பணியும் பணியாளராக நடித்துள்ளார் என்றும் ரஞ்சித் கூறியுள்ளார்.

மேலும் ரஜினியின் கேங்க்ஸ்டர் கும்பலில் ஒரு மெம்பராக அட்டக்கத்தி தினேஷும், ரஜினியின் நெருங்கிய நண்பராகவும் வலது கையாகவும் ஜான்விஜய்யும் நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘மெட்ராஸ்’ படத்தில் ஆர்ப்பாட்டமான அரசியல்வாதியாக நடித்த நடிகர் கலையரசன் இந்த படத்தில் அமைதியான ஆசிரியர் வேடத்தில் நடித்துள்ளதாகவும், ரஜினியின் மகள் கேரக்டரில் நடித்துள்ள தன்ஷிகா பெண் டானாகவும் ஒரு கட்டத்தில் ரஜினியை எதிர்த்து போராடும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளதாகவும் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு பஞ்ச் டயலாக்குகள் எதுவும் இல்லை என்றும் ஆனால் ரஜினி பேசும் ஒவ்வொரு டயலாக்கும் பஞ்ச் டயலாக்குகளை விட வீரியம் உள்ளவை என்றும் அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.

English Summary:Super Star Rajinikanth’s ‘kapali’ new information about the film.