aadharcardஇந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணியில் மத்திய, மற்றும் மாநில அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 31-ம் தேதி வரை 5 கோடியே 26 லட்சத்து 47 ஆயிரத்து 75 பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மேலும் அவர் கூறியதாவது: “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.21 கோடியாகும். அதில் 5 வயதுக்கு மேற்பட்ட 6 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேர்களில் 5 கோடியே 62 லட்சத்து 83 ஆயிரத்து 959 பேருக்கு புகைப்படம், கைரேகை மற்றும் விழித்திரை படல அமைப்பு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 31-ம் தேதி வரை 5 கோடியே 26 லட்சத்து 47 ஆயிரத்து 75 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தொகையில் 83.48 சதவீதம் பேருக்கு தேசிய மக்கள் தொகை, பயோமெட்ரிக் பதிவுப் பணி முடிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை வழங்குவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.

English Summary:Tamil Nadu is India’s primarily State for Aadhaar providing.Minister UdhayaKumar.