மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது மனு தாக்கல் மீதான விசாரணையில் இந்த ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டதை சற்று முன்னர் பார்த்தோம். மேலும், பொதுநுழைவுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இன்று (ஏப்ரல் 28) முடிவு செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நுழைவுத்தேர்வுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்தில் கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்தே பொது நிழைவுத்தேர்வு கிடையாது என்றும், மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த சிறப்பு சட்டம் உள்ளது என்றும் தமிழகம் தரப்பில் வாதிடப்பட்டது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக நுழைவுத்தேர்வு என்பதே என்னவென்றே தெரியாத தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு திடீரென நுழைவுத்தேர்வை எவ்வாறு எழுத முடியும். எனவே நுழைவுத்தேர்வில் தமிழகத்தை சேர்க்கக்கூடாது என்றும் தமிழக வழக்கறிஞர் வலியுறுத்தினார். இதையடுத்து, பொது நுழைவுத்தேர்வு தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
English Summary : Tamil Nadu’s opposition to the medical entrance exam. Case postponed in Supreme Court.