தமிழகத்தில் 7 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரி வெப்பநிலை பதிவாகியது. திருத்தணி, வேலூர், திருச்சி, நாகப்பட்டினம், சென்னை மீனம்பாக்கம், அதிராமபட்டினம் ஆகிய 6 இடங்களில் தலா 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *