10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்த தேர்வுக்கான ஆயத்த பணிகளில் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில்,  முதல் அமைச்சர் பழனிசாமியை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன்  முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஜூன் 1 ஆம் தேதிக்கு பதிலாக 15 ஆம் தேதிக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.   15 ஆம் தேதி தேர்வு தொடங்கி 25 ஆம் தேதி வரை  தேர்வுகள் நடைபெறும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *