இதுவரை அஞ்சல் துறை ஆரம்பித்த திட்டங்களில் குறுகிய காலத்தில் அதிக வரவேற்பை பெற்ற திட்டம் என்று செல்வமகள் சேமிப்பு’ திட்டம்தான் என அனைவரும் கூறுவதுண்டு. அந்தளவுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தில் தங்கள் அன்பு மகளுக்காக பலர் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: “வருமான வரிச்சட்டத்தின் 80-வது பிரிவு, உட்பிரிவு 2-ன் கீழ் உள்ள 8-வது சட்ட உட்கூறின் கீழ் ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டத்துக்கு வருமான வரி சலுகை வழங்கப்படுகிறது.
இந்தச் சலுகையை அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிப்பவர்கள் பெறலாம். கடந்த ஆண்டு வருமான வரிக் கணக்கில் ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டத்தின் கீழ் உள்ள தொகையை சேர்க்க தேவையில்லை. சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர் அல்லது பெற்றோர் / பாதுகாவலர் இச்சலுகையை பெற உரிமை கோரலாம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
English Summary : Chennai Postal Department announced a reduction in Tax for “Selva Magal” film.