தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்இ, எம்டெக், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான டான்செட்’ பொது நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய இந்த நுழைவுத் தேர்வில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.annauniv.edu என்ற இணையதளத்தில் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை எழுதிய மாணவ, மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

மேலும் மதிப்பெண் பட்டியலை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து ஜூன் 19ஆம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் முதல் டவுண்ட்லோடு செய்து கொள்ளலாம் என்றும் மதிப்பெண் பட்டியல் தபாலில் அனுப்பப்படாது என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

English Summary: TANCET Exam results are released. TANCET results can be viewed in Anna University official website.