மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியில் சேர இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகள், கேந் திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் பள்ளிகளில் இவ்வகை ஆசிரியர்கள் சிடெட் என அழைக்கப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் தகுதித்தேர் வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. கடைசியாக, சென்ற 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட் டது. இதுவரை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் தேர்ச்சிபெற்றுவிட்டு ஆசிரியர் பணியை எதிர்நோக்கி யுள்ளனர்.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன் சில் (என்சிடிஇ) விதிமுறைப்படி, ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும். எனவே, இந்த ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு வெகுவிரைவில் வரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டை யன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தகுதித்தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவாக மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் தேர்வின் இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடை பெற்று வருவதால் அப்பணி முடி வடைந்ததும் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது.
டிசம்பர் மாதத்துக்குள் தகுதித் தேர்வை நடத்த முடிவு செய்துள்ள தாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித் தார். தகுதித்தேர்வு முடிந்தவுடன் அடுத்த கட்டமாக வட்டார கல்வி அதிகாரி தேர்வு (பழைய ஏஇஓ தேர்வு), கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு என அடுத்தடுத்து பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.