மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று (19.09.2023) முதல் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு இன்று முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும் எனவும், ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குக்கு தொகை வராமல் இருப்பது உள்ளிட்ட சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இன்று (19.09.2023) முதல் உதவி மையம் செயல்படும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பின்பற்றி பொதுமக்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.