thalasivaசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ‘தல 56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது. அதன்பின்னர் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்க வேண்டிய நிலையில் ‘தல 56’ உள்ளது.

இந்நிலையில் ‘தல 56′ படத்தில் அஜீத் மூன்றுவித கெட்டப்புகளில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜீத் ஏற்கனவே சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் லட்சுமி மேனன் மற்றும் ஸ்ருதிஹாசனுடனும் நடித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் ரெட்’ பட கெட்டப்பிலும் அஜீத் நடிப்பதாக தகவல்கள் வந்ததுடன் அந்த கெட்டப்பின் ஸ்டில்களும் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸில் மூன்றாவதாக ஒரு புதிய கெட்டப்பில் அஜீத் தோன்றுவதாக கூறப்படுகிறது.

மூன்றாவது புதிய கெட்டப்பில் அஜீத் காதில் தோடு, கையில் பிரேசிலேட் மற்றும் குர்தா போன்ற உடையில் வித்தியாசமான பிரெளன் நிற ஹேர்ஸ்டைலில் இருப்பதாக கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பை நேரில் பார்த்தவர்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். எனவே இந்த படத்தில் அஜீத் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அஜீத், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், சூரி, கபீர்சிங், ராகுல் தேவ், தம்பி ராமையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.எம். ரத்னம் தயாரித்து வரும் இந்த திரைப்படம் ‘தல’ ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளது.

English Summary: The Secret of three Different Getup in Ajith .