trainபண்டிகை நாட்களிலும், சில சிறப்பு நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுற்றுலா ரயில்களை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்வது வழக்கம். அந்தவகையில் வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளை முன்னிட்டு சிறப்பு தனி சுற்றுலா ரயிலுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, செப்டம்பர் 30ஆம் தேதி திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாகச் செல்லும் 6 நாள்களுக்கான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுலா ரயில் தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதி, காந்தி அருங்காட்சியகம், இந்தியா கேட், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், அருகில் கோட்டையை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுலாவில் கலந்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.4,870 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்குவதற்கு அறை வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி ஆகியவை அடங்கும்.

இந்த சுற்றுலா ரயில் குறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள www.irctctourism.com என்ற இணையதள முகவரியை பொதுமக்கள் அணுகலாம். மேலும் தொலைபேசி மூலம் இதுகுறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம்- 9003140680
மதுரை ரயில் நிலையம்- 0452-2345757 – 9003140714
கோவை ரயில் நிலையம்- 9003140655
காட்பாடி ரயில் நிலையம்- 9840948484

English Summary: The tourist Train Organized by IRCTC Before Gandhi Jayanthi.