ajithvijayஇளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் முன்பதிவு சமீபத்தில் தொடங்கப்பட்டு முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து டிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்துவிட்ட நிலையில் ‘புலி’ திரைப்படம் ரிலீஸாகும் அதே அக்டோபர் 1ஆம் தேதி அஜீத் நடித்து கொண்டிருக்கும் ‘வேதாளம்’ படத்தின் டிரைலரும் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யின் ‘புலி’ படத்தின் இரண்டாவது டிரைலரும், அஜீத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பும் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் வெளியாகி ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக இணையதளங்களில் டிரெண்ட் ஆன நிலையில் தற்போது மீண்டும் ஒரே நாளில் விஜய் படத்தின் ரிலீஸும், அஜீத் படத்தின் டிரைலர் ரிலீசாக உள்ளது. எனவே வரும் அக்டோபர் 1ஆம் தேதி மீண்டும் ஒருமுறை சமூக இணையதளங்கள் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள அஜீத்தின் வேதாளம் படத்தின் வியாபாரமும் வெற்றிகரமாக கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. வேதாளம் படத்தின் தமிழக உரிமை மட்டும் சுமார் ரூ.40 கோடி அளவில் வியாபாரம் நடந்துள்ளதாகவும், இதுவரை வெளிவந்த அஜீத் பட வியாபாரங்களில் இதுவே பெரியது என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமைகளின் வியாபாரங்களும், தொலைக்காட்சி உரிமைகளின் வியாபாரங்களும் விரைவில் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்தாஸ், ராகுல்தேவ், சூரி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.

English Summary: Vethalam Trailer Release in Puli release date.