முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு அளிக்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகிக்கப்படும் மளிகை பொருட்கள் தொகுப்பில், சர்க்கரை- 500 கிராம், கோதுமை – 1 கிலோ, உப்பு- 1 கிலோ, ரவை- 1 கிலோ, உளுத்தம் பருப்பு- 500 கிராம், புளி- 250 கிராம், கடலை பருப்பு- 250 கிராம், டீ தூள் -200கிராம், கடுகு- 100 கிராம், சீரகம்- 100 கிராம், மஞ்சள் தூள்- 100 கிராம், மிளகாய் தூள்- 100 கிராம், குளியல் சோப்பு 25 கிராம் – 1, துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *