திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இன்று(19.06.2023) முதல் வரும் 21ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட கட்டண சேவைகளில் கலந்து கொள்வதற்கான பக்தர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் முன்பதிவு இந்த மாதம் 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் 21ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறும்.

ஆர்வம் உள்ள பக்தர்கள் தங்கள் ஆதார் எண் போன்ற விவரங்களை தேவஸ்தான வெப்சைட்டில் உள்ளிட்டு தங்கள் பெயர்களை முன் பதிவு செய்து கொள்ளலாம். 21ஆம் தேதி காலை 12 மணிக்கு மின்னணு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களின் அவருடைய செல்போன் எண் அல்லது இமெயிலுக்கு தேர்வு செய்யப்பட்டது பற்றி தகவல் அனுப்பப்படும். அதன்பின் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்.

இதேபோல ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22 ஆம் தேதி காலை 10 மணி முதல் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளில் மெய்நிகர் முறையில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்கள் அவற்றுக்கு உரிய டிக்கெட்டுகளை இந்த மாதம் 22 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல் செப்டம்பர் மாதம் ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *